وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا۟ بِأَحْسَنَ مِنْهَآ أَوْ رُدُّوهَآ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَسِيبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதைக் கொண்டு முகமன் கூறுங்கள். அல்லது அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பாதுகாவலனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதை முகமனாக கூறுங்கள். அல்லது, அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) ஒவ்வொரு செயலையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi86. (எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.