وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا۟ مِنْ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٌ مِّنْهُمْ غَيْرَ ٱلَّذِى تَقُولُ وَٱللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! “உமக்கு எங்கள்) கீழ்ப்படிதல்” எனக் கூறுகின்றனர். உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் (நீர்) கூறுவதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் சதிசெய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக. பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Omar Sharif“(நபியே! எங்கள்) கீழ்ப்படிதல் (உமக்கு உண்டு - நாங்கள் உமக்கு கீழ்ப்படிந்து நடப்போம்)” என்று கூறுகிறார்கள். ஆக, உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் நீர் கூறுவதற்கு மாற்றமாக இரவில் சதி ஆலோசனை செய்கிறார்கள். அவர்கள் இரவில் சதி ஆலோசனை செய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக. (உம்மை பாதுகாக்க) அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi81. (நபியே! ‘‘உமக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்'' என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உமது சமூகத்தில் இருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கிறான். ஆதலால், நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புவீராக. (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.