caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 66

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:66

وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ ٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ أَوِ ٱخْرُجُوا۟ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِّنْهُمْ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا۟ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவர்கள் மீது உங்களைக் கொல்லுங்கள், அல்லது உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறுங்கள் என்று விதித்திருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் உபதேசிக்கப்பட்டதை செய்திருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும் (நம்பிக்கையில் அவர்களை) உறுதிப்படுத்துவதில் மிக வலுவானதாகவும் ஆகி இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “உங்களைக் கொல்லுங்கள், அல்லது, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறுங்கள்” என்று நாம் அவர்கள் மீது விதித்திருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள் இவ்வாறு) செய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு மிக நன்றாகவும் (நம்பிக்கையில் அவர்களை) உறுதிப்படுத்துவதில் மிக வலுவானதாகவும் ஆகி இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi66. நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டுவிடுங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். மேலும், (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70