caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 57

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:57

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا لَّهُمْ فِيهَآ أَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமானவர்கள். பரிசுத்தமான மனைவிகளும் அதில் அவர்களுக்கு உண்டு. அடர்ந்த நிழலிலும் அவர்களை நுழைப்போம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அவற்றில் பரிசுத்தமான மனைவிகளும் அவர்களுக்கு இருப்பார்கள். இன்னும், (சூடும் குளிரும் இல்லாத) அடர்ந்த நிழலிலும் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi57. (அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்கிறார்களோ அவர்களை சொர்க்கங்களில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70