caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 51

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:51

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟ نَصِيبًا مِّنَ ٱلْكِتَٰبِ يُؤْمِنُونَ بِٱلْجِبْتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا۟ هَٰٓؤُلَآءِ أَهْدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ سَبِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? (அவர்கள்) ஷைத்தானையும், சிலையையும் நம்பிக்கை கொள்கின்றனர். நிராகரிப்பாளர்களை நோக்கி "இவர்கள்தான் நம்பிக்கையாளர்களை விட பாதையால் (மார்க்கத்தால்) மிக நேர்வழியாளர்கள்” என்று கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? (அவர்கள்) ஷைத்தானையும், சிலைகளையும் நம்பிக்கை கொள்கிறார்கள். இன்னும், நிராகரிப்பாளர்களை நோக்கி “இவர்கள் நம்பிக்கையாளர்களை விட மார்க்கத்தால் நேர்வழிபெற்றவர்கள்” என்று கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) நிராகரிப்பவர் களைச் சுட்டிக் காண்பித்து ‘‘இவர்கள்தான் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70