caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 47

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:47

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ ءَامِنُوا۟ بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُم مِّن قَبْلِ أَن نَّطْمِسَ وُجُوهًا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدْبَارِهَآ أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّآ أَصْحَٰبَ ٱلسَّبْتِ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதம் கொடுக்கப்பட்டவர்களே! முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர் அல்லது சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் கட்டளையிட்டது நிறைவேற்றப்பட்டே ஆகும்.
Tamil Translation - Omar Sharifவேதம் கொடுக்கப்பட்டவர்களே! - முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர்; அல்லது, சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை - நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேறியே தீரும்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இன்றேல் (உங்கள்) முகங்களை மாற்றி அதைப் பின்புறமாகத் திருப்பிவிடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) ‘அஸ்ஹாபுஸ் ஸப்த்தை' நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70