وَإِن مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِۦ قَبْلَ مَوْتِهِۦ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை நம்பிக்கை கொண்டே தவிர வேதக்காரர்களில் எவரும் இல்லை (இருக்க மாட்டார்). மறுமை நாளில் இவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவராக அவர் இருப்பார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வேதக்காரர்களில் எவரும் இருக்க மாட்டார், அவர் (-ஈஸா) இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை (-ஈஸாவை) நம்பிக்கைக் கொண்டே தவிர. மறுமை நாளில் அவர் (-ஈஸா) அவர்கள் மீது சாட்சி கூறுபவராக இருப்பார் (-தன்னை நிராகரித்தவர்களுக்கு எதிராகவும் தன்னை நம்பிக்கை கொண்டவர்களை உண்மைப்படுத்தியும் சாட்சி கூறுவார்).
Tamil Translation - Abdulhamid Baqawi159. வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார்.