caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 15

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:15

وَٱلَّٰتِى يَأْتِينَ ٱلْفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمْ فَٱسْتَشْهِدُوا۟ عَلَيْهِنَّ أَرْبَعَةً مِّنكُمْ فَإِن شَهِدُوا۟ فَأَمْسِكُوهُنَّ فِى ٱلْبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلْمَوْتُ أَوْ يَجْعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் அவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாக கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் மரணம் அவர்களை கைப்பற்றும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை (சட்டத்தை) ஆக்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் அவர்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு (வேறு) ஒரு சட்டத்தை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரை அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70