وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلْأَنْعَٰمِ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ ٱللَّهِ وَمَن يَتَّخِذِ ٱلشَّيْطَٰنَ وَلِيًّا مِّن دُونِ ٱللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயம் அவர்களை வழி கெடுப்பேன். நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை நிச்சயம் அறுப்பார்கள். நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக மாற்றுவார்கள்” (என்று கூறினான்). எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக பகிரங்கமான நஷ்டமடைந்தான்.
Tamil Translation - Omar Sharif“இன்னும், நிச்சயம் நான் அவர்களை வழி கெடுப்பேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை கட்டாயம் அவர்கள் அறுப்பார்கள். இன்னும், நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்.” (இவ்வாறு ஷைத்தான் கூறினான்.) எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக வெளிப்படையான நஷ்டமடைந்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi119. அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்துவிடுவான்.