إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُ وَلَا تَكُن لِّلْخَآئِنِينَ خَصِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக ஆகிவிடாதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்து கொடுத்ததின் மூலம் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு வழக்காடுபவராக (-அவர்களுக்கு பரிந்துரைப்பவராக) இருக்காதீர். (அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, ஒப்பந்தம் செய்தவராக இருந்தாலும் சரி)
Tamil Translation - Abdulhamid Baqawi105. (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கினோம். (ஆகவே,) நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக இருக்காதீர்!.