caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 51

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:51

فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَمَا هُم بِمُعْجِزِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் அநியாயம் செய்தவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் எவர்கள் அநியாயம் செய்தார்களோ அவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். இன்னும், அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீமைகள்தான் அவர்களை வந்தடைந்தன. (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கிறார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீமைகள் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70