caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 52

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:52

أَوَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகக் கொடுக்கின்றான். (தான் நாடியவர்களுக்கு) சுருக்கமாகக் கொடுக்கின்றான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகக் கொடுக்கிறான். (தான் நாடுபவர்களுக்கு) சுருக்கமாகக் கொடுக்கிறான்” என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi52. அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70