لَهُم مِّن فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحْتِهِمْ ظُلَلٌ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥ يَٰعِبَادِ فَٱتَّقُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு அவர்களின் மேலிருந்தும் நரகத்தின் நிழல்களும் அவர்களுக்கு கீழிலிருந்தும் (நரகத்தின்) நிழல்களும் உண்டு. இது - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை பயந்துகொள்ளுங்கள்! (நிழல்களைப் போன்ற வடிவில் நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.)
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு அவர்களின் மேலிருந்து நரகத்தின் நிழல்கள் (அடுக்கடுக்காக நரகத்தின் புகைகளும் ஜுவாலைகளும் இருக்கும்.) இன்னும் அவர்களுக்கு கீழிருந்து (நரகத்தின்) நிழல்கள் உண்டு. இ(ந்த தண்டனையான)து - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை அஞ்சுங்கள்! (நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi16. (மறுமை நாளில்) ‘‘இவர்களின் (தலைக்கு) மேல் இருந்தும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின்) கீழ் இருந்தும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்'' இதைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான். ‘‘என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்''