caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:15

فَٱعْبُدُوا۟ مَا شِئْتُم مِّن دُونِهِۦ قُلْ إِنَّ ٱلْخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனை அன்றி நீங்கள் நாடியவர்களை வணங்குங்கள். (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள் தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.
Tamil Translation - Omar Sharifஆக, அவனை அன்றி நீங்கள் விரும்பியவர்களை நீங்கள் வணங்குங்கள். (நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள்தான்.” அறிந்து கொள்ளுங்கள்! “இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi15. ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். (ஆகவே, அதற்குரிய தண்டனையை அடைவீர்கள்.)'' “மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் தெளிவான நஷ்டம் என்று (நபியே) கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70