caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:17

وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟ ٱلطَّٰغُوتَ أَن يَعْبُدُوهَا وَأَنَابُوٓا۟ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلْبُشْرَىٰ فَبَشِّرْ عِبَادِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் தாகூத்துகளை (-ஷைத்தான்கள், சிலைகள், தீயவர்கள் ஆகிய) இவர்களை வணங்குவதை விட்டு விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) நற்செய்தி உண்டு. ஆகவே, என் அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் தாகூத்துகளை (-ஷைத்தான்கள், சிலைகள், தாம் வணங்கப்படுவதை விரும்புகின்ற தலைவர்கள், குருக்கள் ஆகிய) இவர்களை வணங்குவதை விட்டு விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) நற்செய்தி உண்டு. ஆகவே, என் அடியார்களுக்கு நற்செய்தி சொல்வீராக!.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (ஆகவே,) ‘‘எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. (ஆகவே,) (நபியே!) நீர் எனது (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70