وَلَوْ نَشَآءُ لَمَسَخْنَٰهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا ٱسْتَطَٰعُوا۟ مُضِيًّا وَلَا يَرْجِعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்திருப்போம். (அவர்களை உருமாற்றி (அழித்து) இருப்போம்) ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (வேதனை இறங்கும் போது அவர்கள் வெளியில் இருந்தால் தங்கள் இல்லங்களுக்கு) திரும்பி வரவும் மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்து (அவர்களை உருமாற்றி அழித்து) இருப்போம். ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (பின்னால்) திரும்பி வரவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.