وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلَىٰٓ أَعْيُنِهِمْ فَٱسْتَبَقُوا۟ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்ப்பார்கள்! (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக நாம் அவர்களை இவ்வுலகிலேயே தண்டிக்க நாடி இருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் எதையும் பார்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்திருப்பார்கள்.)
Tamil Translation - Omar Sharifநாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். ஆக, அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்ப்பார்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi66. நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்?