caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yaseen அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 41 · 36:12

إِنَّا نَحْنُ نُحْىِ ٱلْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا۟ وَءَاثَٰرَهُمْ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ فِىٓ إِمَامٍ مُّبِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் அவர்களின் காலடிச்சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் (நன்மைகளின் பக்கம் அவர்கள் செல்லும்போது) அவர்களின் காலடிச் சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70