وَٱللَّهُ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَٰهُ إِلَىٰ بَلَدٍ مَّيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا كَذَٰلِكَ ٱلنُّشُورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை வறண்டுபோன ஊருக்கு ஓட்டி வருகிறோம். அதன் மூலம் அந்த பூமியை அது வறண்டதற்கு பின்னர் நாம் உயிர்ப்பிக்கின்றோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் (நிகழும்).
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். ஆக, அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை இறந்து போன (-வறண்ட) ஊருக்கு நாம் ஓட்டி வருகிறோம். ஆக, அதன் மூலம் அந்த பூமியை அது இறந்ததற்குப் பின்னர் நாம் உயிர்ப்பிக்கிறோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் நிகழும்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கிறான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே.