caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:8

أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنًا فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَٰتٍ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَصْنَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவரை வழிகெடுக்கின்றான். தான் நாடுகின்றவரை நேர்வழிபடுத்துகின்றான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட (-அழிந்துவிட) வேண்டாம். (நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஆக, எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுகிறவரை வழிகெடுக்கிறான். தான் நாடுகிறவரை நேர்வழிபடுத்துகிறான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதை அழகாகக் காண்கிறானோ அவனா (தீயதை தீயதாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறவனைப் போன்று ஆவான்)? (ஒரு போதும் ஆக மாட்டான்.) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உமது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர் கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70