هُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَٰٓئِفَ فِى ٱلْأَرْضِ فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُۥ وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது. நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக (ஒரு தலைமுறைக்குப் பின்னர் ஒரு தலைமுறையாக) ஆக்கினான். ஆக, எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர அதிகப்படுத்தாது. இன்னும், நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர அதிகப்படுத்தாது.
Tamil Translation - Abdulhamid Baqawi39. அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதேசாரும். இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு கோபத்தை தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை. இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை.