caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 29

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:29

إِنَّ ٱلَّذِينَ يَتْلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَٰرَةً لَّن تَبُورَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆதரவு வைக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆசைப்படுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70