لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦٓ إِنَّهُۥ غَفُورٌ شَكُورٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (-அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்.