وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلْأَنْعَٰمِ مُخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ كَذَٰلِكَ إِنَّمَا يَخْشَى ٱللَّهَ مِنْ عِبَادِهِ ٱلْعُلَمَٰٓؤُا۟ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களிலும் (ஏனைய) கால்நடைகளிலும் ஆடு மாடு ஒட்டகங்களிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுவதெல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifமக்களிலும், ஊர்வன விலங்குகளிலும், (-பூமியின் மேல் செல்லக் கூடிய பொதுவான மிருகங்களிலும், ஆடு மாடு ஒட்டகம் குதிரை போன்ற) கால்நடைகளிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான்.