caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:2

مَّا يَفْتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُۥ مِنۢ بَعْدِهِۦ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை விடுபவர் எவரும் இல்லை. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. இன்னும், அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை அனுப்பித்தருபவர் எவரும் இல்லை. இன்னும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதை அனுப்பக்கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70