caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:3

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَٰلِقٍ غَيْرُ ٱللَّهِ يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَأَنَّىٰ تُؤْفَكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கின்ற படைப்பாளன் (வேறு) யாரும் அல்லாஹ்வை அன்றி உண்டா? அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனைவிட்டு) திருப்பப்படுகிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifமக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கிற படைப்பாளன் அல்லாஹ்வை அன்றி யாரும் உண்டா? அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனை விட்டு) திருப்பப்படுகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கிறானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகிறீர்கள்?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70