caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ جَاعِلِ ٱلْمَلَٰٓئِكَةِ رُسُلًا أُو۟لِىٓ أَجْنِحَةٍ مَّثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ يَزِيدُ فِى ٱلْخَلْقِ مَا يَشَآءُ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். (அவன்) வானங்களையும் பூமியையும் படைத்தவன், வானவர்களை இரண்டு இரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகளை உடையவர்களாகவும் (நபிமார்களிடம் அனுப்பப்படுகின்ற) தூதர்களாகவும் ஆக்கக்கூடியவன். படைப்புகளில் தான் நாடுவதை அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன்.
Tamil Translation - Omar Sharifஎல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும். அவன்தான் மகா ஞானமுடையவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். வானவர்களைத் தன் தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் மேலும் அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70