إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا۟ دُعَآءَكُمْ وَلَوْ سَمِعُوا۟ مَا ٱسْتَجَابُوا۟ لَكُمْ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் செவிமடுத்தாலும் உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மை செய்திகளை) அறிவிக்க முடியாது.
Tamil Translation - Omar Sharifநீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவியுற மாட்டார்கள். அப்படியே அவர்கள் செவியுறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு அவர்கள் பதில் தர மாட்டார்கள். இன்னும், மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மையான செய்திகளை) அறிவிக்க முடியாது.
Tamil Translation - Abdulhamid Baqawi14. அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்.