caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:11

وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَٰجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِۦٓ إِلَّا فِى كِتَٰبٍ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் அவருடைய வயதில் குறைக்கப்படுவதில்லை பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, அவள் கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவருக்கு நீண்ட வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் ஒருவருடைய வயது குறைக்கப்படுவதில்லை (அவை எல்லாம்) பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இல்லாமல் எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70