وَقَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦ وَأَنَّىٰ لَهُمُ ٱلتَّنَاوُشُ مِن مَّكَانٍۭ بَعِيدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை பார்த்தபோது) அவனை (அல்லாஹ்வை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (-மறுமைக்கு சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்து கொண்டு தவ்பா - பாவமீட்சியையும் இறை நம்பிக்கையையும்) அடைவது எங்கே அவர்களுக்கு சாத்தியமாகும். (அதாவது உலகத்தில் செய்ய வேண்டியதை மறுமையில் செய்ய ஆசைப்படுகின்றனர். உலகில் செய்ய வேண்டியதை மறுமைக்கு வந்தவுடன் செய்ய ஆசைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!)
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையைப் பார்த்தபோது) அவனை (-அல்லாஹ்வை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (-மறுமைக்கு சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்துக் கொண்டு தவ்பா - பாவமீட்சியையும் இறை நம்பிக்கையையும்) அடைவது எங்கே அவர்களுக்கு சாத்தியமாகும். (அதாவது உலகத்தில் செய்ய வேண்டியதை மறுமையில் செய்ய ஆசைப்படுகிறார்கள். அங்கே ஆசைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!)
Tamil Translation - Abdulhamid Baqawi52. (அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு) அதை (நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்?