caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 42

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:42

فَٱلْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَلَا ضَرًّا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்றைய தினம் உங்களில் சிலர் சிலருக்கு நன்மை செய்வதற்கோ தீமை செய்வதற்கோ உரிமை பெறமாட்டார். அநியாயக்காரர்களுக்கு நாம் கூறுவோம்: நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த நரக வேதனையை சுவையுங்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, இன்றைய தினம் உங்களில் சிலர் சிலருக்கு நன்மை செய்வதற்கோ தீமை செய்வதற்கோ உரிமை பெறமாட்டார். இன்னும், அநியாயக்காரர்களுக்கு நாம் கூறுவோம்: “நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த நரக தண்டனையை சுவையுங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi42. அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். மேலும், (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி ‘‘நீங்கள் (நம் வேதனையைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்த(தன் காரணமாக) இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்'' எனக் கூறுவோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70