قَالُوا۟ سُبْحَٰنَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِم بَلْ كَانُوا۟ يَعْبُدُونَ ٱلْجِنَّ أَكْثَرُهُم بِهِم مُّؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுவார்கள்: நீ மகா தூயவன். அவர்கள் இன்றி நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக, அவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்கள் அவர்களைத்தான் (-அந்த ஜின்களைத்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்.
Tamil Translation - Omar Sharif(வானவர்கள்) கூறுவார்கள்: (அல்லாஹ்வே!) நீ மகா தூயவன். அவர்கள் இன்றி, நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக, அவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்கள் அவர்களைத்தான் (-அந்த ஜின்களைத்தான்) நம்பிக்கை கொண்டவர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. அதற்கவர்கள், ‘‘(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன்; அவர்களன்று. மாறாக, அவர்கள் ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்'' என்று (வானவர்கள்) கூறுவார்கள்.