caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 37

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:37

وَمَآ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَٰدُكُم بِٱلَّتِى تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰٓ إِلَّا مَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًا فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ جَزَآءُ ٱلضِّعْفِ بِمَا عَمِلُوا۟ وَهُمْ فِى ٱلْغُرُفَٰتِ ءَامِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் செல்வங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை எங்களிடம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக இல்லை. எனினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததற்கு பகரமாக இரு மடங்கு கூலி உண்டு. அவர்கள் (சொர்க்கத்தில் கோபுர) அறைகளில் நிம்மதியாக இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் செல்வங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை எங்களிடம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக இல்லை. எனினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததற்கு பகரமாக இரு மடங்கு கூலி உண்டு. இன்னும், அவர்கள் (சொர்க்கத்தில் கோபுர) அறைகளில் நிம்மதியாக இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. (நீங்கள் எண்ணுகிறவாறு) உங்கள் செல்வங்களும் உங்கள் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவை அல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) அவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. மேலும், அவர்கள் (சொர்க்கத்திலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70