قُلْ إِنَّ رَبِّى يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் அவன் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக தருகின்றான். (நாடுகின்றவர்களுக்கு) சுருக்கி கொடுக்கின்றான். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மை தத்துவத்தை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் அவன் நாடுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகத் தருகிறான். இன்னும், (அவன் நாடுபவர்களுக்கு) சுருக்கி கொடுக்கிறான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதன் தத்துவத்தை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.''