caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:34

وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَآ إِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் ஊரில் நாம் எச்சரிப்பாளரை அனுப்பவில்லை, அதன் சுகவாசிகள் நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம் என்று (அவர்களிடம்) கூறியே தவிர. (-பெரும்பாலான சுகவாசிகள் இறைத்தூதர்களின் மார்க்கத்தை நிராகரித்தே வந்திருக்கின்றனர்.)
Tamil Translation - Omar Sharifஓர் ஊரில் (அந்த ஊர் மக்களை) எச்சரிக்கை செய்கின்ற தூதரை நாம் அனுப்பினால், அதன் சுகவாசிகள் நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம் என்று (அவர்களிடம்) கூறாமல் இருக்க மாட்டார்கள். (-பெரும்பாலான சுகவாசிகள் இறைத்தூதர்களின் மார்க்கத்தை நிராகரித்தே வந்திருக்கிறார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi34. அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நமது) தூதரை நாம் எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கிறோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70