وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَأْتِينَا ٱلسَّاعَةُ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتَأْتِيَنَّكُمْ عَٰلِمِ ٱلْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَلَآ أَصْغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرُ إِلَّا فِى كِتَٰبٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“மறுமை எங்களிடம் வராது” என்று நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக! ஏன் (வராது), மறைவானவற்றை நன்கறிந்தவனாகிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும். அவனை விட்டும் வானங்களிலும் பூமியிலும் அணு அளவு(ள்ள அற்பபொருள் எதுவு)ம் மறைந்துவிடாது. அதை விட சிறியதும் அதை விட பெரியதும் (அனைத்தும்) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர இல்லை.
Tamil Translation - Omar Sharif“மறுமை எங்களிடம் (ஒருபோதும்) வராது” என்று நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “ஏன் (வராது), மறைவானவற்றை நன்கறிந்தவனாகிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு(ள்ள அற்பபொருள் எதுவு)ம் அவனை விட்டும் மறைந்துவிடாது. அதை விட சிறியதும் அதை விட பெரியதும் இல்லை, (அவை அனைத்தும்) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர!”
Tamil Translation - Abdulhamid Baqawi3. (எனினும்) “மறுமை நமக்கு வராது'' என்று (இந்)நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘ ஏன் வராது, மறைவானவை அனைத்தையும் அறிந்தவனான என் இறைவன் மீது சத்தியம்! கண்டிப்பாக அது உங்களிடம் வந்தே தீரும். அவன் அறிவை விட்டும் வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.''