بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلْـَٔاخِرَةِ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும். அவன்தான் மகா ஞானமுடையவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifநபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன்தான் ஞானமுடையவன், அனைத்தையும் நன்கறிந்தவன்.