caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Sajda அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 75 · 32:9

ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவனை சமமாக்கினான் (சீரான, நேர்த்தியான முறையில் உருவமைத்தான்). தனது (-தான் படைத்த) உயிரிலிருந்து அவனில் ஊதினான். உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் இதயங்களையும் அவன் அமைத்தான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவனை சமமாக்கினான் (சீரான, நேர்த்தியான முறையில் உருவமைத்தான்). தான் படைத்த உயிரிலிருந்து அவனுக்குள் ஊதினான். இன்னும், உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் இதயங்களையும் அவன் அமைத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70