caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Sajda அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 75 · 32:10

وَقَالُوٓا۟ أَءِذَا ضَلَلْنَا فِى ٱلْأَرْضِ أَءِنَّا لَفِى خَلْقٍ جَدِيدٍۭ بَلْ هُم بِلِقَآءِ رَبِّهِمْ كَٰفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுகின்றனர்: “நாங்கள் (மரணித்த பின்னர் புதைக்கப்பட்டு) பூமியில் (மண்ணோடு மண்ணாக) மறைந்து விட்டால், (அதன் பிறகு) நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பில் (மீண்டும்) படைக்கப்படுவோமா?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிக்கின்றவர்கள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் (மரணித்தப் பின்னர் புதைக்கப்பட்டு) பூமியில் (மண்ணோடு மண்ணாக) மறைந்து விட்டால், (அதன் பிறகு) நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பாக (மீண்டும்) படைக்கப்படுவோமா?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. ‘‘(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70