caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Sajda அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 75 · 32:3

أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ بَلْ هُوَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதை அவர் (-முஹம்மது) இட்டுக் கட்டினார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, இதுதான் உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையா(ன வேதமா)கும். இதற்கு முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு சமுதாயத்தை -அவர்கள் நேர்வழி பெறுவதற்காக- நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இவ்வேதம் இறக்கப்பட்டது).
Tamil Translation - Omar Sharifஇதை (முஹம்மத்) இட்டுக் கட்டினார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக! இது, உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையா(ன வேதமா)கும். இதற்கு முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு சமுதாயத்தை - அவர்கள் நேர்வழி பெறுவதற்காக - நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இவ்வேதம் இறக்கப்பட்டது).
Tamil Translation - Abdulhamid Baqawi3. (நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உமது இறைவனால் உமக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உமக்கு முன்னர் இதுவரை ஒரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70