caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:28

مَّا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ إِلَّا كَنَفْسٍ وَٰحِدَةٍ إِنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களை (-உங்கள் அனைவரையும்) படைப்பதும் உங்களை (மரணிக்க வைத்து பின்னர் உயிர்கொடுத்து) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (வேறு ஒரு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஉங்களை படைப்பதும் (நீங்கள் மரணித்த பின்னர்) உங்களை (உயிருடன்) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (எனக்கு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70