وَلَوْ أَنَّمَا فِى ٱلْأَرْضِ مِن شَجَرَةٍ أَقْلَٰمٌ وَٱلْبَحْرُ يَمُدُّهُۥ مِنۢ بَعْدِهِۦ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَٰتُ ٱللَّهِ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் எல்லாம் எழுதுகோல்களாக இருந்து, இன்னும் கடல் -(மையாக மாறி) அதற்குப் பின்னர் ஏழு கடல்களும் அதற்கு மையாக மாறினால், (பின்னர் அல்லாஹ்வின் ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுகோல்கள் தேய்ந்துவிடும், கடல்கள் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் எல்லாம் எழுது கோல்களாக இருந்து, இன்னும் கடல் - (மையாக மாறி) அதற்குப் பின்னர் ஏழு கடல்களும் அதற்கு மையாக மாறினால், (பின்னர் அல்லாஹ்வின் ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுகோல்கள் தேய்ந்துவிடும், கடல் நீரெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.