caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 54

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:54

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنۢ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَآءُ وَهُوَ ٱلْعَلِيمُ ٱلْقَدِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் உங்களை பலவீனமான ஒன்றிலிருந்து (-இந்திரியத்திலிருந்து) படைத்தான். பிறகு, பலவீனத்திற்கு பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பிறகு, பலத்திற்கு பின்னர் பலவீனத்தையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன் தான் நாடுவதை படைக்கிறான். அவன்தான் மிக்க அறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் உங்களை (இந்திரியம் என்ற) பலவீனமான ஒரு பொருளிலிருந்து படைத்தான். பிறகு, பலவீனத்திற்கு பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பிறகு, பலத்திற்கு பின்னர் பலவீனத்தையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், அவன்தான் மிக்க அறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு (உங்களை) ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனும் அவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70