وَمَآ أَنتَ بِهَٰدِ ٱلْعُمْىِ عَن ضَلَٰلَتِهِمْ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து (மீட்டெடுத்து அவர்களை) நீர் நேர்வழி செலுத்துபவர் அல்லர். நமது வசனங்களை நம்பிக்கை கொள்கின்றவர்களைத் தவிர மற்றவர்களை நீர் செவியுறச் செய்ய முடியாது. அவர்கள்தான் (-நம்பிக்கை கொள்பவர்கள்தான் நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து (மீட்டெடுத்து அவர்களை) நீர் நேர்வழி செலுத்துபவர் அல்லர். நமது வசனங்களை நீர் செவியுறச் செய்ய முடியாது, நம்பிக்கை கொள்பவர்களுக்கே தவிர. ஆக, அவர்கள்தான் (முஸ்லிம்கள் - நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உம்மால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்றவர்களை (உமது நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க வைக்க உம்மால் முடியாது.