فَإِنَّكَ لَا تُسْمِعُ ٱلْمَوْتَىٰ وَلَا تُسْمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوْا۟ مُدْبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (நபியே!) நிச்சயமாக நீர் இறந்தவர்களுக்கு (உமது அழைப்பை) செவியுறச் செய்ய முடியாது. இன்னும் நீர் (உமது) அழைப்பை செவிடர்களுக்கும் செவியுறச் செய்ய முடியாது அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) நிச்சயமாக நீர், (உமது) அழைப்பை இறந்தவர்களுக்கு கேட்கவைக்க முடியாது. இன்னும், செவிடர்களுக்கும் கேட்கவைக்க முடியாது, அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. (நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது.