لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَٰهُمْ فَتَمَتَّعُوا۟ فَسَوْفَ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கின்றனர்). (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! (விரைவில் உங்கள் இறைவனிடம் நீங்கள் வரும்போது உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்.
Tamil Translation - Omar Sharifநாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆக, (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! ஆக, (மறுமையில் உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப்பவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பலனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.