وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَعَشِيًّا وَحِينَ تُظْهِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும் (அல்லாஹ்வை துதியுங்கள்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியப் பொழுதில் இருக்கும்போதும் (அல்லாஹ்வை தொழுது துதியுங்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi18. வானங்களிலும் பூமியிலும் இரவிலும் பகலிலும் அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே, நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்.)