كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَٰٓءِيلُ عَلَىٰ نَفْسِهِۦ مِن قَبْلِ أَن تُنَزَّلَ ٱلتَّوْرَىٰةُ قُلْ فَأْتُوا۟ بِٱلتَّوْرَىٰةِ فَٱتْلُوهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதவ்றாத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரவேலர்களுக்கு எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது, இஸ்ராயீல் தன் மீது விலக்கியவற்றைத் தவிர. (யூதர்களே! நீங்கள்) உண்மையாளர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டுவாருங்கள்! அதை ஓதுங்கள்! என்று (நபியே!) கூறுவீராக.''
Tamil Translation - Omar Sharifதவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரவேலர்களுக்கு எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது, இஸ்ராயீல் தன் மீது விலக்கியவற்றைத் தவிர. “(யூதர்களே! நீங்கள்) உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவாருங்கள்! இன்னும் அதை ஓதுங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi93. இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டு வந்து ஓதிக் காண்பியுங்கள்.''