قُلْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيْنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (இன்னும் அவர்களுடைய) சந்ததிகள் மீது இறக்கப்பட்டதையும்; மூஸா, ஈஸா இன்னும் (அனைத்து) நபிமார்கள் தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். இவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவரை நபியல்ல என்று) பிரிக்கமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்).
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (இன்னும் அவர்களுடைய) சந்ததிகள் மீது இறக்கப்பட்டதையும்; மூஸா, ஈஸா இன்னும் (அனைத்து) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். இவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவரை நபியல்ல என்று) பிரிக்கமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi84. (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவற்றையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம்.''