أَفَغَيْرَ دِينِ ٱللَّهِ يَبْغُونَ وَلَهُۥٓ أَسْلَمَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்கள் விரும்பியும், நிர்பந்தமாகவும் அவனுக்கே பணிந்தார்கள். (மறுமையில்) அவன் பக்கமே (அனைவரும்) திருப்பப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் (இஸ்லாம்) மார்க்கம் அல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களோ விரும்பியும், நிர்ப்பந்தமாகவும் அவனுக்கே பணிந்தார்கள். இன்னும், (மறுமையில்) அவன் பக்கமே அவர்கள் (அனைவரும்) திரும்ப கொண்டுவரப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi83. அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. மேலும், (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.